வழமையாக வழங்கப்படும் 6500 ரூபா தீபாவளி கொடுப்பனவுடன் மேலும் 3500 ரூபா சேர்க்கப்பட்டு 10,000 ரூபா வழங்கப்படும் என்று மலையக அரசியல் தலைமைகள் மேடைகளில் மார்தட்டிககொண்ட போதும் தற்போது 6500 ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தோட்டத் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
ஏற்கனவே சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் கடுமையான அதிருப்திக்குள்ளாகியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் மலையக அரசியல் தலைமைகளின் குள்ளநரித்தனத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இம்முறை கறுப்புத் தீபாவளியாக கொண்டாடவுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய விலைவாசியில் 6500 ரூபாவில் தமது பண்டிகைத் தேவைகளை பூர்த்திக் செய்துக்கொள்வது எவ்வாறு என்று கேள்வியெழுப்பியுள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல நாட்கள் வேலைக்கு செல்லாமையினால் மாதச் சம்பளத்தையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.