பதிவு செய்யாமல் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களை ஆட்கடத்தல் செய்யும் சட்டவிரோத நடவடிக்கையொன்று ஓமான் சோஹார் நகரில் அடையாளங்காணப்பட்டுள்ளது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அழைத்துவரும் பெண்கள் சுமார் 1500 ரியாலுக்கு (5 இலட்சத்து 70.000 ரூபா) விற்கு சட்டவிரோதமாக பணிப்பெண்களாக விற்கப்படுகின்றமை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓமான் சட்டத்தின் படி அந்நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைத்து வீட்டுப் பணிப்பெண்களும் ஓமான் மற்றும் அவரவரது சொந்த நாடுகளின் தூதரங்களில் பதிவு செய்ய்படுதல் கட்டாயமாகும். எனினும் மேற்கூறப்பட்ட ஆட்கடத்தல் செயற்பாடானாது எவ்வித பதிவுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லும் பெண்களில் பலர் இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், பிலிபபைன மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த முகவர் நிலையங்களின் கருத்திற்கமைய இலங்கையிலிருந்து மிகவும் ,இலகுவாகவும் பாதுகாப்பாகவும் வீட்டுப் பணிப்பெண்களை சட்டவிரோதமாக ஓமானுக்கு அழைத்து வர முடியும் என்றும் அதற்கான அடையாள அட்டை, வீஸா, மற்றும் சம்பள அறிக்கை மட்டுமே போதுமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி பெறாத வீட்டுப் பணிப்பெண்களுக்கு 80 லியாலும் பயிற்சி பெற்ற பணிப்பெண்களுக்கு 100 தொடக்கம் 120 ரியால் வரை சம்பளமாக வழங்கப்படும்.
இலங்கை தூதரகம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத அனைவரும் சட்ட விரோதமாக வௌிநாடு சென்றவர்கள் என்றே கருதப்படுவர் என்று தெரிவித்துள்ள ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அவ்வாறு அடையாளங்காணப்பட்ட 70 பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்