எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் சர்வதேச வர்த்தக மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 11 தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய தொழில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
எட்கா ஒப்பந்தத்தினால் இலங்கையின் தொழிற்சந்தையில் இந்தியர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றமையினால் இவ்வழுத்தம் மேற்கொள்வதாக அம்முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
எட்கா ஒப்பந்தத்துடன் இலங்கையில் தொழிற்றுறையில் ஏற்படும் மாற்றத்துடன் அதாவது தொழிற்றுறை உலகமயமாக்கலுடன் பொருளாதார கொள்கை முக்கிய அங்கமாகிறது. தொழிலுக்கான பெறுமதியும் குறையும். மேலும் இலங்கையர்களுக்கு தமது தமது வருமானம் குறைவடைவதுடன் தொழில் போட்டி தொடர்பான சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்படும்.
சர்வதேச சந்தை மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான தேசிய கொள்கை நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட , தொழில் வல்லுநர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உருவாக்கப்பட வேண்டும். மேலும் இது தொடர்பில், தொழிற்சங்கங்களும், தொழிற்சங்கவாதிகள் மிகவும் அவதானத்துடன் உள்ளன என்று அம்முன்னணி சுட்டிகாட்டியுள்ளது.
சர்வதேச வர்த்த அமைப்பான ‘கெட்ஸ்’ ஒப்பந்தத்திற்கமைவாக இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உறவை ஆராய்ந்து, நாட்டுக்கு நன்மைபயக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். வர்த்தக சேவை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அந்நாடுகளுடன் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் காணப்படும் பாதகத்தன்மைகளை ஆராய்ந்து சாதகத்தன்மையை ஏற்படுத்த அனுமதி பெறல், தீர்மானங்களை எட்டக்கூடிய சட்டங்களையும் உருவாக்குதல் உட்பட 7 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவை செயற்படுத்தப்படும் வரை எட்கா உட்பட எந்தவொரு சர்வதேச வர்த்தக ஒப்பந்ததிலும் கைச்சாத்திடக்கூடாது என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அம்முன்னணி தெரிவித்துள்ளது.
இம்முன்னணியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச பல் மருத்தவ அதிகாரிகள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் , தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம், தொலைதொடர்பு பொறியிலாளர் சங்கம், முற்போக்கு வங்கி ஊழியர் முன்னணி, தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், சுங்க அதிகாரிகள் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், புகையிரத தரவரிசை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன பொறியிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் எட்கா விடயம் தொடர்பில் ஒன்றிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்