விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவான 11 பேருக்கான நேர்முகப்பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே நேர்முகப்பரீட்சை விரைவில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இப்போட்டிப்பரீட்சையினூடாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் நிலவும் விளையாட்டு உத்தியோகத்தர் தரம் 111இற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
இப்பரீட்சையில் தமிழ் மொழிமூலம் 9 பேரும் சிங்கள மொழி மூலம் 2 பேருமாக மொத்தம் 11 சித்தியடைந்திருந்தனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் அனுப்பப்படும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்