பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைத்து பிக்குமாருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல பட்டதாரி பிக்குகள் அபிவிருத்தி அதிகாரிகளாக கிராமசேவகர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் தொழிலில் அவர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலாநிதி சங்கைக்குரிய கோனதுவே குணாநந்த தேரருரை மேல்மாகாண பிரதான சங்கத் தலைவராக பதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.