வடக்கு கிழக்கு ஆசிரியர் இணைப்பிற்காக விசேட அமைச்சரவை பத்திரம்!

வடக்கு கிழக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தொழில் யாப்பின் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட மீதான இரண்டாம் நாள் விவாத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை கணனிமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக 1500 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக மூவாயிரம் பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அமைச்சர் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் மொழி ரீதியிலான வகுப்பறை சமத்துவத்தைப் பேணும் வகையில் ஆசிரியர்களை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் கீழ் 30 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435