அரச சேவைக்கு 6000 தகவல் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் பி.கேஎஸ் ரவீந்தர தெரிவித்துள்ளார்.
நாடு பூராவும் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மாகாணசபைகள், மாகாண அமைச்சுக்கள், மாகாண திணைக்களங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகளிக்கான பயிற்சிகள் நியமனம் வழங்கப்பட்ட உடனேயே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட பயிற்சிகள் கடந்த 22, 23ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்பட்டதாகவும் அதில் 5 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.