நிர்மாணத்துறை பயிற்சி பூர்த்தி செய்த 190 பேருக்கு நிரந்தர நியமனம்

தொழில்நுட்ப நிறுவனங்களில் நிர்மாணத்துறை பயிற்சியை பூர்த்தி செய்த 190 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.

அதற்கமைய புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பயிற்சி பெற்று வந்த இளைஞர் யுவதிகளுக்கு நாட்டில் உள்ள பிரதான கட்டுமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

NVQ தர பயிற்சிகளை பூர்த்தி செய்யப்பட்ட குறித்த இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தலைமையில் நடைபெற்றது.

தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவற்றின் அனுசரனையில் இடம்பெற்ற நிகழ்வில், பயிற்சியை பூர்த்தி செய்ய இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிக் காலத்தில் 50,000 ரூபாவும் பயிற்சியின் பின்னர் 70,000 ரூபா சம்பளமும் பெறக்கூடிய வகையிலான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435