வருடத்திற்கு 18 இலட்சம் மணி நேரத்தை அலைபேசியில் செலவிடும் அரச ஊழியர்கள்

கடமை நேரங்களில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதனூடாக வருடத்திற்கு 18 இலட்சம் மணி நேரத்தை அரச ஊழியர்கள் பயனற்ற வகையில் செலவழிக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனை கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். உலகிலேயே அதிக அரச ஊழியர்கள் உள்ள நாடு இலங்கை. ஏனைய நாடுகளில் 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்ற வகையில் உள்ளனர். ஆனால் இலங்கையில் 25 பேருக்கு ஒருவர் என்ற வகையில் அரச ஊழியர்கள் உள்ளனர் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தபோதே தற்போதைய சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதனால் 18 இலட்சம் மணித்தியாலங்களை நாசமாக்குவதாக அறியப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

யாழ் மாவட்டத்தில் கஷ்டப்பிரதேசங்களில் பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனை 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும். குறிப்பாக தீவுப்பகுதிகளில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு 3000 ரூபா வழங்கப்பட வேண்டும். நெடுந்தீவு போன்ற அதி பின்தங்கிய பிரதேசங்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா வழங்கப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435