இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு இதுவரை 3264 முறைப்பாடுகள்

பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு இதுவரை 3264 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றை விசாரணை செய்வதற்கு 196 விசாரணை அதிகாரிகள் மட்டுமே உள்ளனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இன்று (29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான சம்பவங்களை அறிக்கையிடுதல் தொடர்பான செயலமர்வில் வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆணைக்குழுவுக்கு ஏனைய எந்தவொரு ஆணைக்குழுவுக்கும் இல்லாத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவின்றி எம்மால் பறிமுதல் செய்வதற்கோ அவருடைய ஏனைய வங்கி விபரங்களை அறிவதற்கோ எமக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எமது ஆணைக்குழுவுக்கு 431 விசாரணை அதிகாரிகளை இணைத்துக்கொள்ள முடியும். எனினும் தற்போது 196 அதிகாரிகள் மட்டுமே தற்போதுள்ளனர். இடப்பற்றாக்குறையே இதற்கு பிரதான காரணம்.

எமது ஆணைக்குழுவில் பொலிஸ் அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அவ்வாறின்றி பட்டதாரி மாணவர்களை இணைத்து பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கு அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைக்கு உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். புதிய அதிகாரிகள் இணைக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்குவோம்.

தற்போதைய ஊடகங்கள் மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளை பிரசுரித்து வியாபாரம் செய்கின்றன. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நாம் அவ்வாறான செய்திகளை விடவும் மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு செல்லும் செய்திகளை வௌியிட வேண்டும்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு என்பது பாடசாலை மட்டத்திலிருந்தே பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று. எனவே ஆணைக்குழு என்ற ரீதியில் நாம் பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளுக்கு இது தொடர்பில் அறிவை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் லஞ்ச ஊழல் மோசடியற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435