பெருந்தோட்டங்களில் சட்டரீதியாக பதிவை பெற்றுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பர்சஸ் காணி உறுதி பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தோட்ட மக்கள் தற்போது வசிக்கும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சுமார் 2 இலட்சத்து 56, 533 குடும்பங்களும் அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்களில் 9,025 குடும்பங்களும் தற்போது வசித்து வருகின்றன. அக்குடும்பங்களுக்காக இதுவரை 33,000 வீடுகள் நிர்மானித்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய குடும்பங்களில் லயன்களிலும் தற்காலிக இடங்களில் வசித்து வருகின்றனர்.
வீட்டுரிமையை பொது மக்களுக்கு வழங்குதல் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமைய, தோட்டங்களில் வாழும் மக்களுக்கு 7 பர்சஸ் காணியும் அதற்கு வங்கியில் சாட்சியாக வைக்கக்கூடிய உறுதிப்பத்திரத்தையும் வழங்குவதற்கு இந்த இடங்கள் விடுவிக்கப்படவுள்ளன.
மண்சரிவு ஏற்படாத இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மக்களுக்காக விடுவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.