ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும் – சுதந்திர ஊடக அமைப்பு

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சமூகம் தனது கடமையை திறம்பட சுதந்திரமாக பொறுப்புணர்வுடன் செயற்படுவது உறுதி செய்யப்படவவேண்டும். அத்துடன் ஊடக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அநாவசியமான அழுத்தங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்று சுதந்திர ஊடக அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடு முழுவதும் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான செய்தி சேகரிப்பில் ஈடுபடும் போது பல்வேறு கட்சி, அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றமை தொடர்பில், பிராந்திய ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வௌியாகியது.

செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்கள் எந்த ஊடக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்து பிரசார கூட்டங்களில் செய்தி சேகரிப்பதில் பிரச்சினைகள் தோற்றுவிப்பதாக சுதந்திர ஊடக அமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் என்பது பொதுமக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு மட்டுமானதல்ல. அறிவுள்ள குடிமகன் என்றவகையில் வேட்பாளர்களின் கொள்கைகள் அதனை பலப்படுத்த வழங்கப்படும் தகவல்கள் அறிந்து அறிவுபூர்வமான தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு நம்புகிறது.

வாக்காளர்களுக்கான தகவல்களை சமநிலைத்தன்மையுடன் வழங்குவதென்பது சுயாதீனமான, சுதந்திரமான ஊடகவியலாளர் போன்றே அனைத்து ஊடக நிறுவனங்களினதுமான கடமையாகும்.

தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் தொழில்ரீதியான பொறுப்பு மட்டுமன்றி அது தொடர்பான நெறிமுறைகளையும் ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வௌிட்டுள்ள வழிகாட்டலை பின்பற்றவேண்டும் என்பதை சுதந்திர ஊடக அமைப்பு இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஊடகவிலாளர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமன்றி, ஊடக நிறுவனங்களுக்கும் அழுத்தங்களை கொடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து அதிகாரிகளிடமும் சுதந்திர ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதனால், 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அவர்களின் கடமையை சரிவர செய்வதற்கான சூழலலை ஏற்படுத்திக்கொடுப்பது போட்டியிடும் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் கடமை என்பதை சுதந்திர ஊடக அமைப்பு வலுவாக வலியுறுத்துகிறது. நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435