மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களை அதிபர் மற்றும் ஏனைய சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபையில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், மலையக தோட்டப் பாடசாலைகளின் அவசியம் குறித்தும் மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனஙகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது தொடர்பிலும் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனால் தமிழ் மொழி மூல பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டதாகவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.