![](https://archive.velaiththalam.lk/wp-content/uploads/2016/12/1504480924Untitled-1-550x450.jpg)
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நேற்றுமுன்தினம் (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அங்குள்ள கடற்படை தளபதியினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (13) அம்பாறை மணிக்கூட்டு கோபுர சந்தியில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிபலிக்கும் பல ஊடக அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், அம்பாறை மாவட்ட பௌத்த மத துறவிகள், அகில இலங்கை பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்கள் தலையில் கறுப்பு பட்டியை அணிந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.