குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்ட சவுதி அரசு தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவின் புதிய போக்குவரத்துச் சட்டப்படி பத்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டோ அல்லது முன்னிறுக்கையில் உட்கார வைத்தோ செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்டத்தை முதற்தடவை மீறுவோருக்கு 150 தொடக்கம் 300 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இரண்டாம் தடவை சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சட்டத்திற்கு முரணான வகையில் இலக்கத் தகடுகளை பயன்படுத்துவோர் மற்றும் வீதி சமிக்ஞைகளை மீறுவோருக்கு 3000 ரியால் அபராதம் விதிக்கப்படும். தனது வாகன அனுமதி பத்திரத்தை பிறருக்கு கொடுத்தால் ஆயிரம் ரியால் அபராதமாக விதிக்கப்படும்
மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வேறு நபருக்கு பயன்படுத்த அல்லது பிறரின் உத்தரவாதத்திற்கு பிணையாக வைத்தல் என்பவற்றுக்கு 1000 ரியாலும் அதிகபட்சமாக 2000 ரியாலும் அபராதமாக விதிக்கப்படும்.
விபத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றால் மூன்று மாதச் சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரியால் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இப்புதிய போக்குவரத்துச் சட்டமானது கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.