கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்களில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்கான பொது மன்னிப்புக்காலம் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து இச்சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் கட்டாரில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியில் செல்லும் போது தமது ஆள் அடையாள அட்டையை கொண்டு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
கடந்த தினங்களில் கட்டாரின் கைத்தொழில் பிரதேசமான வக்ரா, சைலியா போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மற்றும் கட்டார் அடையாள அட்டை இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது மன்னிப்பு காலத்தில் நாடு திரும்ப தவறியவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று ஏற்கனவே அந்நாட்டு அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.