சுவீடன் கைத்தொழிற்றுறை வேலைவாய்ப்பை பெற நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளீர்களா? அதற்காக நீங்கள் இணையதளம் ஊடாகவே விண்ணப்பிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய விபரக்கோவை மற்றும் சிறு அறிமுக கடிதத்தையும் அனுப்புவதனூடாக நேர்முகத்தேர்வுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
நீங்கள் அனுப்பும் சுயவிபரக்கோவையில் உங்கள் கல்வித் தகமை, அடைவுகள், அனுபவங்கள் மற்றும் விசேட திறமைகள் தொடர்பான விபரங்களுடன் உங்களை தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்க மறக்க வேண்டாம்.
உங்களது அறிமுகக்கடிதம் ஒரு பக்கத்திற்கு அதிகமாகாத வண்ணம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அத்துடன் அக்கடிதத்தில் குறித்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் பொருத்தமானவராக கருதுவது ஏன் என்பதையும் குறிப்பிடுவதனூடாக வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்.
விபரக்கோவையுடன் ஏனைய ஆவணங்கள், சான்றிதழ்கள் வேறிடங்களில் பணியாற்றியதனூடாக பெறப்பட்ட அனுபவக்கடிதங்கள் என்பவற்றையும் இணைத்து அனுப்புங்கள்.
கீழ்வரும் தொழிற்சங்கங்களினூடாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்
சுவீடன் தேசிய தொழிற்சங்க சம்மேளனம் (LO)- The Swedish Trade Union Confederation
சுவீடன் வல்லுநர் தொழிற்சங்க சம்மேளனம் (SACO) – The Swedish Confederation of Professional Association
சுவீடன் ஊழியர் சங்க சம்மேளனம் (TCO) – The Swedish Confederation of Employees
நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கான ஆலோசனைகள்
உங்கள் ஆவணங்களை ஆராயும் நிறுவனங்கள் நீங்கள் குறித்த பொறுப்புக்களுக்கு பொறுத்தமானவர்களா என்று அறிவதற்கு நேர்முகத்தேர்வுக்கான உங்களுடன் தொடர்புகொள்வர். ஏற்கனவே உங்களுடைய அடிப்படை தகமைகள் தொடர்பில் அறிந்துள்ளமையினால் நீங்கள் காட்டும் அக்கறைக்கமைய தொழில் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
வௌிநாடுகளில் இருந்து சுவீடன் நாட்டு தொழில்வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதாயிருப்பதாயின் முதலாவது நேர்முகத் தேர்வு தொலைபேசி , வீடியோ அல்லது ஸ்கைப் ஊடாக மேற்கொள்ளப்படும். வீசா தொடர்பான விபரங்களை சுவீடன் குடியகழ்வு திணைக்கள உத்தியோகப்பூர்வ இணையதளமான பெற்றுக்கொண்டிருப்பதுடன் நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
மேலும் நேர்முகத்தேர்வின் போது உங்களுக்குள்ள சந்தேகங்களை எந்தவித தயக்கமுமின்றி கேட்டுத் தெரிந்துக்கொள்வது அவசியம்.