திடீர் தீ விபத்துக்களை தவிர்க்க டுபாயில் நடவடிக்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீயிலிருந்து உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கான புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக டுபாயிலுள்ள உயந்த கட்டிடங்களில் அடிக்கடி தீவிபத்துக்கள் ஏற்படுகின்றமையினால் மக்களின் பாதுகாப்பு கருதி இப்புதிய சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டம் எதிர்காலத்தில் டுபாயில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் திடீர் தீவிபத்துக்களை தவிர்ப்பதே இதன் பிரதான நோக்கம் என்றும் திடீர் தீவிபத்துக்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் தெளிவுபடுத்தப்படுவர் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் திடீர் தீவிபத்துக்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435