ஆறு அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட வர்த்தமான அறிவித்தலை இலங்கை நுகர்வோர் அதிகாரசபை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் மைசூர் பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 159 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பயறு 205 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நெத்தலி 405 ரூபாவாகவும், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நெந்தலி 490 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 93 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு ஒரு கிலோகிராம் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு உற்பத்தியாளரும், இறக்குமதியாளரும், விநியோகஸ்தரும், வர்த்தகரும் குறித்த பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யவோ விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.