பாலியில் ரீதியான துன்புறுத்தல்களும் பாதுகாப்பும்

இலங்கையின் அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரைக்கு அமைய இனம், மதம், மொழி, குளம், ஆண்-பெண், பிறப்பிடம், அரசியல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு என்ற வேறுபாடு கிடையாது.

ஒவ்வொருவருக்கும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்வதற்கான உரிமை உள்ளது.

அரசியலமைப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் குறிப்பிடுவதுபோல இந்த சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமில்லை என்பது மனித உரிமை மீறலாகும்.

அதுமட்டுமல்ல 1995/22 ஆம் இலக்க குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் 345 ஆவது உறுப்புரைக்கு அமைய, பாலியல் வன்முறை தொடர்பான தண்டனைக்குரிய குற்றமாகும்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்றால் என்ன?

கீழே குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் பாலியல் ரீதியான வன்முறைகள் என்கின்றபோதிலும் பெரும்பாலனவர்கள் அதை சரியான முறையில் அறிந்திருப்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிறுமிகள், பெண்கள் இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

• ஆண் ஒருவர் அவசியமற்ற முறையில் பெண் ஒருவரின் மீது சாய்தல்.

• பாலியல் தொடர்பான படங்களை காண்பித்தல்.

• அவசியமற்ற முறையில் உடல் மீது தாக்குதல்

• முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துதல்.

• தொலைபேசி இலக்கத்தை கோருதல்.

• கைத்தொலைபேசியில் தவறான புகைப்படங்களை காண்பித்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை குறிப்பிட்ட சில வன்முறைகளே. பாலியல் துன்புறுத்தல் ரீதியான தன்மைகள், தாக்குதல், அதிகாரத்தை முறையற்ற வழியில் பயன்படுத்தல் அல்லது செயற்பாட்டு ரீதியான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பொதுப் போக்குவரத்துக்கு

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நமது நாட்டில் 90 வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களில் தொழிலில் ஈடுபடும் பெண்களும் கல்வி கற்கும் பெண்களுமே அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் பணெ;கள் 52 வீதமானவர்கள். அவர்களுள் 34 வீதமானோர் தொழில் புரிகின்றனர்.

அவர்களுள், 50 வீதமானவர்கள் தொழிலுக்குச் செல்லும்போதும், 28 வீதமானவர்கள் கற்றல் நடவடிக்கைக்காகவும், 20 வீதமானவர்கள் வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக செல்கின்ற சந்தர்ப்பத்திலும் பொதுப்போக்குவரத்துகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

அதேநேரம் தங்களுடன் செல்லும் பெண்களும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக 82 வீதமான பெண்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் தொழிலுக்கு செல்லும் பெண்களும் கல்வி கற்கச் செல்லும் பெண்களும் ஒரே நேரத்தில் தான் பொது போக்குவரத்தில் பயணம் செய்கின்றனர். இந்த காலப்பகுதியில் வீதிப் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவு காணப்படும். இதன் காரணமாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவது இயல்பான ஒன்று என்று கூறும் அளவுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

தங்களுக்கு இழைக்கப்படுகின்ற இதுபோன்ற அநீதிகளை மற்றவர்களிடம் கூறும்போது, தனித்தனியாக வாகனத்தை எடுத்து; செல்லுமாறு கூறுகின்றனர்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரம் தொடர்பான பொலிஸ் பிரிவின் தகவல்களுக்கு அமைய, இவ்வாறாக துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளவர்களில், நான்கு வீதமானவர்களே நியாயம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஆய்வு அறிக்கைகளின் தகவல்கள் எவ்வாறானது

இந்த ஆய்வுக்காக அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 15 முதல் 35 வயதிற்கு இடைப்பட்ட 2500 பெண்களுடன் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தினோம்.

அவர்களும் 90 வீதமானவர்கள் பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ பல்வேறு விதமான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் தங்களுடைய உடற்பாகங்களை தொடுவதற்கு முயற்சிப்பதாக அவர்களுள் 74 வீதமான பெண்கள் தெரிவிக்கின்றனர்.

முறையற்ற விதத்தில் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஆண்கள், நித்திரை கொள்வது போல பாவனை செய்து உடல் ரீதியான தொடுகையில் ஈடுபட முயற்சிப்பதாக 50.52 வீதமான பெண்கள் தெரிவிக்கின்றனர்

பொறுமையாக இருப்பதை தவிர வேறு என்ன செய்வது?

பெண்ணாக இருந்தால் பொறுமையாக இருக்க பழக வேண்டும் தானே தாயும் தனது மகளுக்கு சொல்லிக்கொடுப்பார்.

பஸ்ஸில் ஒரு சிறிய அளவு தூரத்திற்கு செல்லும்போது ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளை வெளியே சொல்வதை சிலர் அவமானமாக கருதுகின்றனர். மேலும் சிலர் அச்சப்படுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களை வெளியே சொல்லும்போது, தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை கொடுக்கும் ஆண்களுக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டால், அவர்கள் தங்களை பழிவாங்கக்கூடும் என சில பெண்கள் அஞ்சுகின்றனர்.

தற்போதைய காலத்தில் பஸ்களில் இடம்பெறும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் தொடர்பில் ஒருவருக்காக மற்றவர் குரல் கொடுப்பதில்லை. அதன் காரணமாக பொதுப்போக்குவரத்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்

இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றங்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்யமுடியும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றது

எனினும் தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்றால் எங்கு முறைப்பாடு செய்வது என்பதை அறியாமல் கூட 74 வீதமான பெண்கள் இருக்கிறார்கள்.

119 அல்லது 1938 முதலான இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பிரிவு தெரிவிக்கிறது

இவ்வாறு முறைப்பாடு செய்யும்போது, தாம் பயணிக்கும் பஸ்ஸின் இலக்கத்தையும், வீதி இலக்கத்தையும் பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

இதன்போது, குறித்த வீதியில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அதிகாரி ஒருவர் உங்களுக்கு உதவி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருகை தருவார்.

இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக மேற்கூறப்பட்ட தரப்பினரை தொடர்புகொண்டு அவர்களுடைய உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரிரையில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது. எனவே அதற்கான பொறுப்பினை நிறைவேற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

புண்யா சாந்தனி (womanly)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435