மக்களுடைய காணியை வன இலாக்கா அபகரிக்க முயற்சியா?

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் விவசாய காணிகளை வன இலாக்காவினர் சுவீகரிக்க முயற்சி செய்து வருவதாக குறித்த பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில், 1965, 1967, 1970 மற்றும் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விவசாய செய்கைக்காக அப்பகுதியில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தன. அதற்கான உறுதிப்பத்திரங்கள் தம்மிடம் உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விவசாய நிலங்களை துப்பரவு செய்து விவசாயம் செய்ய முயற்சிக்கும் போது அந்த நிலங்கள் வனஇலாக்காவுக்கு சொந்தமானது எனக்கூறி அதில் தம்மை நுழைய அனுமதிக்க வில்லை மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வன இலாக்கா அதிகாரிகள் குறித்த வயல் நிலங்களுக்குள்ளும், மக்களின் காணிகளுக்குள்ளும் தமது எல்லைக் கற்களை புதைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனூடாக 187 குடும்பங்களுக்கு சொந்தமான புதுக்குளம், தம்பனைக்குளம், சின்னக்குஞ்சுக்குளம், மங்கலம்பிட்டி, பாலமோட்டைத் தோட்டம் ஆகிய குளங்களுக்கு கீழ் உள்ள காணிகளும், மானாவாரி காணிகளுமாக 200 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் வனஇலாகாவால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் காணிகள் தமது சொந்தக் காணிகள் எனத் தெரிவிக்கும் மக்கள், அதற்குரிய உறுதிப் பத்திரங்களும் தம்மிடம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

200 ஏக்கர் காணியை வன இலாக்காவின் அபகரிப்பதால் தாம் தொழில் இன்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், 200 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களையும் வனஇலாக்காவினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி, பிரதமர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தமக்கு தீர்வைப் பெற்று தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

02

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435