அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான உத்தரவை அடுத்து, இலங்கையர்கள் சிலரும் நியூயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், யேமன், சோமலியா முதலான 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு 90 நாட்களுக்கு தடை விதித்து டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவில் அகதிகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய, 20 நாடுகளைச் சேர்ந்த 71 அகதிகள் நியூயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனா, மலேசியா, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, அல்ஜீரியர், ஜோர்தான், கட்டார், செனகல், சுவிட்சர்லாந்து, எகிப்து, கானா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்களே ஜோன் கென்னடி விமான நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.