கடற்றொழில் துறை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய கடற்றொழில் ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
48 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த சபை அமைக்கப்படவுள்ளது.
கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், மாகாண கடற்றொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, கரையோர பாதுகாப்புத் திணைக்களம், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, கமநல சேவைகள் அதிகாரசபை, நீர்ப்பாசன அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலா அமைச்சு, காணி அமைச்சு என்பனவற்றின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.
கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதும், துறையின் நிலைபேறான அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இந்தச் சபையின் நோக்கங்களாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.