புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று (21) ஆரம்பமாகி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு, இலங்கை அரசாங்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மாநாட்டில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. மாநாட்டின் நிறைவில் கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு ஆவணம் பிரகடனப்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் சுகாதாரம் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
உலகில் தற்போது சுமார் ஒரு பில்லியன் புலம்பெயர்ந்தோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 250 மில்லியன் பேர் சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்தோர்களாகவும், 750 மில்லியன் பேர் உள்நாட்டு ரீதியில் புலம்பெயர்ந்தோர்களாக உள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 2 மில்லியன் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.