தென் மாகாணத்திலுள்ள அரச மருத்துவமனைகள் இன்று (21) நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை தென் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. நோயாளர்களுக்கு குறை;ந்தளவான அசௌகரியம் ஏற்படும் வகையிலேயே இந்த பணிப்புறக்கணிப்ப மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் என்பன வழமைபோல இடம்பெறுவதாக குறிப்பிட்ட அவர், சாதாரண சேவைகளிலிருந்தே மருத்துவர்கள் விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது இந்த பணிப் புறக்கணிப்பால் ஏற்படும் பாதிப்புக்க அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.