மீண்டும் போராட்டத்தில் இறங்குமா தனியார் பஸ் சாரதிகள் சங்கம்

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாகஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமார இந்த தகவலைகொழும்பில் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 25ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை ஆட்சேபித்தமை காரணமாகவே ஜனாதிபதியினால்அதனை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் அந்தக்குழு குறித்த தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அமையவேண்டும் என்றும் அத்தொகை 150ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அரசாங்கம் பொதுமக்களின் நிலைமையை கவனிக்காது வருமானம் ஈட்டும் நடவடிக்கையில்மாத்திரமே கவனம் செலுத்துவதை காட்டுகிறது என்று சரத் விஜிதகுமார குற்றம்சுமத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435