ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியும் நிதி அமைச்சரின் கருத்தும்

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை மீண்டும் அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் டொலரின் பெறுமதி பலமடைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் வீழ்ச்சி தொடர்பாக நேற்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காண்பதை அரசாங்கம் என்ற ரீதியில் மிகவும் வெற்றிகரமாக முகம்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ரூபாவின் பெறுமதி குறைவதைத் தவிர்ப்பதற்காக அந்நிய செலாவணியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் அதனைச் செய்யவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ரூபாவின் பெறுமதி 2012ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே கூடுதலாக வீழ்ச்சி கண்டிருந்தது. அன்று ரூபாவின் பெறுமதி 14 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்..

இந்த வருடம் அமெரிக்க பொருளாதாரத்தில் முனேற்றம் காணப்படுகின்றது. இந்த நிலமை காரணமாக உலக நாடுகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. தற்போது 160 ரூபா 60 சதம் என்ற மட்டத்திற்கு டொலர் பலமடைந்துள்ளது.

இம்முறை ரூபாவின் பெறுமதி ஒன்பது சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 11 சதவீதத்தினாலும், இந்தோனேசியாவில் 8 தசம் 9 சதவீதத்தாலும், கொரியாவில் 8 சதவீதத்தினாலும் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்ய நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சி கண்டுள்ளன.

இலங்கையின் பொருளாதாரத்தை பலமாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் செல்வந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435