ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களில் கடந்த ஆண்டு க.பொ. த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக ஊழியர் நம்பிக்கை நிதிய பொது முகாமையாளர் டப்ளியூ.எஸ். வசந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலமைபரிசாக சித்தியடைந்த மாணவருக்கு 12 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் தொகையை பெறவிரும்பும மாணவர்கள் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்பாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.