ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பள அதிகரிப்பை வழங்காமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த ஆணையாளர் நாயகம், இது தொழிலாளர் உரிமையை மீறும் செயல் என்றும் பாரிய குற்றமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாவட்ட தொழில் அலுவலக அதிகாரி அல்லது நாராஹேன்பிட்டவில் உள்ள தலைமை தொழில் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.