ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீண்டும் சேவையில்- ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பட்டதாரிகள் பலர் அரச வேலையின்றிப் போராடிவரும் நிலையில் மலையகத்தின் பொகந்தலாவ பாடசாலையொன்றில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் உரையாற்றியபோது அங்கு காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கின்றது. மலையகம் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல பட்டதாரிகள் வேலைக்காக

போராடிவரும் நிலையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் அடிப்படையில் போட்டிப்பரீட்சை மூலம் உள்வாங்குவதோடு, மேலதிகமாகவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்படுமாயின் கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் மாணவர் தொகைகளையும் அதிகரிக்க முடியும்.

இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கும் செயற்பாட்டின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாய நிலையையே தோற்றுவிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435