
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து வருவது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் வடக்கு மீனவர் சங்கத் தலைவர்களுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று (21) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்தது.
மேற்படி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் மஹிந்த அமரவீர வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தவுள்ளார்.
இதேவேளை; இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு இரண்டு அரசாங்கங்களும் ராஜதந்திர ரீதியாக தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான அழைப்புக் கடிதம் இரண்டொரு தினங்களில் தமக்குக் கி்ட்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்/ நன்றி- தினகரன்