எயாபார்க் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

ஹுன்னஸ்கிரிய – எயாபார்க் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபன தலைவர் திலக் மஹாநாம உறுதியளித்துள்ளார்.

எயாபார்க் தோட்டத் தொழிலார்கள் கடந்த பெப்ரவரி மாதம் இரவுபகலாக நான்கு நாட்கள் சத்தியாகிரகமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபனம் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மூன்று வாரம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அந்த சத்தியாகிரகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

மூன்று வாரங்கள் கடந்து எவ்வித பதிலும் வழங்காததை தொடர்ந்து கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை எயாபார்க் தோட்டத் தொழிலார்கள் ஆரம்பித்தனர்.

இதன் அடுத்தகட்டமாக, 25 வேலை நாட்கள் தருவது தொடர்பாக உத்தரவாதமளிக்க வேண்டும் என கோரி கொழும்பிலுள்ள இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபன அலுவலகத்தின் முன்னாள் எயாபார்க் தோட்ட மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தை ஏற்பாடு செய்த இலங்கை செங்கொடி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபன தலைவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

எதிர்வரும் 07 ஆம் திகதி எயாபார்க் தோட்டத்துக்கு வருகை தந்து மக்களின் நிலைமை தொடர்பாக ஆராய்வதாக இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபன தலைவர் திலக் மஹாநாம மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் இதன்போது உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 20 ஆம் திகதி செங்கொடி சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், உறுதியளித்துள்ளனர்.

மேலும,; இந்த போராட்டத்துக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது வழங்கப்படாத கொடுப்பனவுடன், வருவுக்கான கொடுப்பனவையும் வழங்க அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், எயாபார்க் தோட்ட மக்களுக்கு வறுமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழியொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டு தாபன தலைவர் திலக் மஹாநாம உறுதியளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435