ILO பிரதிநிதி தொழில் அமைச்சருடன் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சிம்ரின் சிங் (Simrin Singh) திறன்கள் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

நாரேன்பிடியில் உள்ள தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை கட்டியெழுப்புதல்,

தொழிலாளர் நம்பிக்கை நிதியத்தின் கணக்கு அறிக்கையை தொழிலாளர்கள் தங்களது கைத்தொலைபேசியில் பெற்றுக்கொள்வதற்காக அந்த நிதியத்தின் பணிகளை கணினி வலையமைப்பில் கொண்டுவருதல்,

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பிரச்சினைகள்,

உலக வர்த்தக சந்தையில் அழுத்தம் செலுத்தும் காரணிகள்,

தொழிலாளர்களை உருவாக்குவதற்காக இலங்கையின் தொழில் துறையில் பயிற்சிகளை
நவீனமயப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த சந்திப்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435