அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (07) நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தனியார் வைத்தியதுறையினரும் கலந்துகொண்டுள்ளனர் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
நாடு தழுவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் விபத்துப் பிரிவுகள், மகப்பேற்று மருத்துவ நிலையங்கள், சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியாலை, சிறுநீரக வைத்தியசாலை மற்றும் டையலசிஸ் பிரிவுகள் இயங்குவதுன் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் என்றும் சங்க செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களை வைத்து சட்ட விரோதமான நிறுவனமொன்றை நியாயப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சக்வித்தி போன்ற இன்னொறு வியாபாரமே சைட்டம். இதனை சட்டத்தினூடாகதான் கையாள வேண்டும். முன்னாள் உயர்கல்வியமைச்சர் 2011ம் ஆண்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறித்த பல்கலைக்கழகத்தில் குறைப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். பின்னர் 2013ம் ஆண்டு குறைப்பாடுகள் இல்லை என்ற முறன்பாடான தகவலை வெளியிட்டிருந்தார். எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி நியமித்து குழு சைட்டம் பல்கலைக்கழகத்தில் குறைப்பாடுகள் உண்டு என்று தெரிவித்துள்ளது என்றும் செயலாளர் நவீன் டி சொய்ஸா சுட்டிக்காட்டியுள்ளார்