50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு: ஹட்டனில் கையெழுத்து வேட்டை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது.

12.07.2019 அன்று காலை ஹட்டன் நகர மத்தியில் இக் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

தோட்ட தொழிலாளர்களின்கோரிக்கையினை நிறைவேற்றாதாஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்குதோட்ட தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என கோரி மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள மலையக அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு பாதீட்டில் பெற்று தருவதாக கூறிய 50 ரூபாவை இதுவரை வழங்க முடியாமல் வக்கத்து போயிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இதனை உடனடியாக பெற்றுக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மலையக பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு 50ரூபாவினைவழங்குவதாக கூறிய அரசாங்கம்இதுவரை 50சதத்தை கூடவழங்கவில்லை.

தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்று கொடுக்க புதியஒரு அமைப்பை கட்டி எழுப்பவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன்போது 100ற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435