சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 6, 176 பேர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 176 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன் கிழமை (13) வாய்­மூல விடைக்­கான கேள்வி – பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக் குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தால் நிறுவப்பட்டுள்ள கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பிரிவினரால் இலங்கைக் குடிமக்கள் 6176 பேர் கடந்த 5 வருடத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிணை நிபந்தனைகள் கடுமையாகக் காணப்பட்டமையால் பிணை பெற்றுக்கொள்ள முடியாமலுள்ள சந்தேகநபர்கள் எவரும் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. எனினும், பிணை பெறுவதற்காக மேல் நீதிமன்றத்துக்குப் பிணைக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படாமையால் இரண்டு பேர் சுமார் 18 மாத காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகக் கடல் வழியாக வெளிநாடு செல்வதுடன் தொடர்புடைய 544 விசாரணைகளில் 246 விசாரணைகள் பூர்த்தி செய்து, 74 விசாரணைகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறே, அந்த விசாரணைகளில் 172 விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்க வேண்டியுள்ளன. மீதி 126 விசாரணைகளைத் துரிதமாக பூர்த்தி செய்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

பின்னர், தனது முதலாவது மேலதிக கேள்வியைத் தொடுத்த வாசுதேவ நாணயக்கார,கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனில், வழக்கு விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை எனில் அவர்களைக் குற்றங்களில் இருந்து விடுவித்து, வழக்குகளில் இருந்து விடுவிக்க எடுக்க நடவடிக்கை எடுக்கமுடியுமா?” என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இது சம்பந்தமாக அறிக்கையொன்றைக் கோரி இவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்-என்றார்.

நன்றி- ஒன்லைன் உதயன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435