திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சிலர் நேற்று (28) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை கிழித்து விட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தியதை கண்டித்து சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எவருக்கும் தடையேற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவை எடுத்துச் சென்ற அதிகாரிகள் முன்னிலையில், பட்டதாரிகள் நீதிமன்ற உத்தரவை கிழித்து விட்டு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகளின் இந்த செயல் நீதித்துறைக்கு பெரும் அவமதிப்பு என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவை கிழித்த நபர்களை கைது செய்யுமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் வின்