நாடு பூராவும் உள்ள அரச பாடசாலைகளில் 15,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாசிரியர் பற்றாக்குறையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ள ஆசிரியர்கள் கடுமையான சிக்கல்களை சந்தித்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை காரணமாக மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையினால் சிக்கலை எதிர்நோக்குவது போலவே இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ள கஸ்டப்பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இது பெரும் சிக்கலான நிலைமை. ஏற்கனவே 19 கல்வியியற் கல்லூரிகள் கற்கையை பூர்த்தி செய்த 5000 பேர் வௌியேறியுள்ளனர். அவர்கள் கற்கையை பூர்த்தி செய்திருந்தபோதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே பாடசாலை ஆலோசகர் பதவிக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பரீட்சை நடத்தி பெயர் வௌியிடப்பட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை.
எனவே, விரைவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.