கூட்டு ஒப்பந்தம்: சமரசம் மூலம் தீர்க்க நீதிமன்றம் பரிந்துரை

கூட்டு ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் எதிர்வரும் ஜுலை ஐந்தாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரசம் மூலம் தீர்க்கப்படுவது நல்ல என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான இளயத்தம்பி தம்பையா குறித்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், தொழில் ஆணையாளர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள், 22 தோட்ட நிறுவனங்கள், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொழிற் சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும், ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளுக்கும் எதிரானது என்பதை மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டி

தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிராளிகள் மேலும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மனு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதானாலும் காலம் தாழ்த்தாது சமரசத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்திருந்ததுடன் அவரே முன்னிலைப்பட்டு வாதங்களை முன்வைத்தார்.

அந்த வகையில், 08.05.2017 ஆம் திகதியில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடி மனுதாரரின் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் 2016 ஒக்டோபர் 16 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டமை சட்டத்திற்கு முரணானதா என்பது பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.

இது சட்ட முரணானதெனில் அந்த திகதியிலிருந்து இரண்டு வாரத்திற்குள் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சமரசமாக தீர்க்க முன்வர வேண்டும் எனவும் நீதியரசர் எஸ். துரைராஜா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் யூலை 4 ஆம் திகதி மேற்படி கலந்துரையாடல்கள் பற்றியும், சமரச தீர்வு எட்டப்பட முடியுமாயின் அது பற்றியும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டார்.

இது சமரசமாக தீர்க்கப்படாவிட்டால் தீபாவளி பண்டிகை நெருங்கும் போது தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்கி போராடுவர். இது ஆரோக்கியமான விடயமாக அமையாது.

இவ்வழக்கு எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், சமரசத் தீர்வு இருப்பின் அன்று அது பற்றி மன்றுக்கு பிரதிவாதிகள் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளயார்.

மேலும், சமரச தீர்வு இல்லையெனில் பிரதிவாதிகள் அவர்களது ஆட்சேபனையை அன்று பதிவு செய்ய வேண்டுமென்றும் ஆட்சேபனையை பதிவு செய்ய மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் நீதியரசர் எஸ் துரைராஜா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435