வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமா?

கடந்த 2009 ம் ஆண்டு ஐந்தாம் மாதம் 19ம் திகதியாகும் போது 3 வருட சேவையை பூர்த்தி செய்த தொண்டர் ஆசிரியர்களுக்கு மட்டுமே நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால்

ஏனையோரை பணியில் இணைப்பதில் பிரச்சினைகள் உள்ளன என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ம் திகதி யாழ், வசாவிளான் மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த யுத்த காலத்தில் 1400 பேர் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றினர் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசாங்கம் 19.05.2009ம் அன்று மூன்று வருடங்களை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2013 வரை காலத்தை நீடிக்குமாறு வட மாகாணசபை கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ஆதரவாக போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டங்கள் காரணமாக அவர்களின் நிர்ப்பதங்களுக்கு செவிமடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கேட்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை 2009ம் ஆண்டுடன் யுத்தம் நிறைவடைந்து விட்டது. எனவே தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் சிக்கல் காணப்படுகிறது.

பட்டதாரிகளும் நியமனம் கோரி ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர். விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களை உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள முடியும். ஆனால் வடக்கில் வணிகம், நடனம், சங்கீதம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பதனால் அனைத்து பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும் அதற்கு தீர்வு வழங்க முயற்சித்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435