பெற்று, தென் கொரியா செல்வோரிடம், ரூபா 5 இலட்சம் பிணை பணமாக அறவிடப்பட்டு வந்த முறை நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத்தரவுக்கு அமைய இவ்வறவீட்டு முறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழில் முயற்சியாளர்களிடம் தற்போது நடைமுறையிலுள்ள பிணையாளர் முறையுடன், குறித்த ரொக்க பிணை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முறை நீக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் சுமார் 26,000 இலங்கையர்கள் பணி புரிகின்ற நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 6,629 பேர் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.