அரசியலுக்காக ஏமாற்ற நினைத்தால்….

தொழில் வேண்டி நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்தை அரசியலுக்காக ஏமாற்ற நினைத்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர அரச நியமனம் கோரி கடந்த 85 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் நேற்று (22) கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

காரைத்தீவு விபுலானந்த சதுக்கமருகில் முகாமிட்டு நிரந்தர அரச நியமனம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி 15ம் திகதி கிழக்கு முதலமைச்சரை சந்தித்து எமது ​கோரிக்கையை முன்வைத்தோம். இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்தார். இது வரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நோயாளர்களை போராடுவதை போல் சில அரசியல்வாதிகள் எங்களை பார்வையிட வருகின்றனர். எதிர்கட்சி, ஆளுங்கட்சி என அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் எந்தவிதமான பயனும் இல்லை.

எமது பிரச்சினை தொடர்பில் இதுவரை ஜனாதிபதியோ பிரதமரோ வாய் திறக்கவில்லை. இது கவலைக்குரிய விடயம். நல்லாட்சியென்றால் எமது பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக நாம் ஜே.வி.பியுடன் இணைந்து போராடவும் தயங்கமாட்டோம். நோன்பு காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகள் என்ன செய்ய போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் நாம் இந்த 81 நாட்களும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். பெண் பட்டதாரிகள் பலருக்கு தொழிலின்மை காரணமாக திருமணம் அமையாதிருக்கிறது. வரன் பார்ப்போர் பட்டதாரிகளென்றால் அந்தஸ்த்துள்ள தொழில் செய்வோராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று கவலை வௌியிட்டனர்.

தினகரன்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435