GSP + சலுகை இன்னும் இரண்டு வருடத்தில் கிடைக்காமல் போகலாம்…

இலங்கைக்கு கிடைத்துள்ள கிடைத்துள்ள GSP + சலுகை மீண்டும் இல்லாமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக உலக தொழிற்சங்க இலங்கை கவுன்சிலின் உதவி தலைவர் அண்ட்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

சலுகையினூடாக கிடைக்கும் வருமானத்தில் 50 வீதத்தை ஊழியர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும் அதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றமையினால் எதிர்வரும் இரு வருடங்களில் மீண்டும் அச்சலுகை மீண்டும் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும்

நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

GSP + சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தொழிற்சங்க தலைவர் என்ற வகையில் நான் உட்பட குழுவினர் பங்களிப்பு வழங்கினோம். இதனூடாக பெற்றுக்கொள்ளும் உள்ளூர் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களுக்கான வரிச்சலுகையினூடாக தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் என்றே தாம் பங்களிப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு தொழில் அமைச்சர் இணக்கம் தெரிவித்ததுடன் அவ்வாறு தொழிலாளருக்கு வழங்கப்படுவது கடமையென்றும் உறுதிளித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றமையினாலேயே GSP + சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போனது என்று சுட்டிக்காட்டிய அண்ட்டன் மார்க்கஸ் GSP + இன் நன்மைகளை எவ்வாறு தொழிலாளருக்கு கிடைக்கவேண்டும் என்பதற்கான வரைப்படமொன்று அமைக்கப்பட்டு பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435