தகவல்கள் இல்லை: EPF பெறுவதில் தோட்ட தொழிலாளர்களுக்கு சிக்கல்

உரிய தகவல்கள் இல்லாமை காரணமாக பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை EPF பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

பதுளை, பசறை மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் மத்திய வங்கிக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை 2 மாதங்களுக்குள் தமது அமைச்சுக்கும் தொழில் திணைக்களத்துக்கும் வழங்க வேண்டும் என தொழில் ஆணையாளரின் தலையீட்டுடன் விரைவில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதியங்களை பெற்றுக்கொள்வதற்காக மூன்று 4 வருடங்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சிலர் பணம் கிடைக்கும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் தொழிலாளி ஒருவர் ஓய்வு பெறுவாராயின் 2 மாதங்களுக்குள் அவரின் அனைத்து கொடுப்பனவுகளை வழங்க தங்களது ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435