கிழக்கு கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளமையினால் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஆகக்குறைந்தது மூன்று வருடங்களும் ஆகக்கூடியது ஐந்து வருடங்களும் ஒரு பதவியில் அல்லது சேவையில் நிலையத்தில் பணியாற்றிவர்கள் மேற்படி இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள் ஆவர்.

57 வயதுக்கு மேற்பட்டவர்கள் வௌிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டும் மூன்று அதிகாரிகளைக் கொண்ட சபையினால் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன் போது சிங்க மொழி உத்தியோகத்தர்களுக்கான மாற்றல் வழங்கப்படவில்லை. அரசியல் தலையீடின்றி இவ்விடமாற்றங்கள் நடைபெறும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சு உறுதியளிக்க வேண்டும் என்று கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435