அரச உத்தியோகத்தர்கள் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடமிருந்து 2018ம் ஆண்டு இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்விடமாற்றங்கள் எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

முகாமைத்துவ உதவியாளர், மொழி பெயர்ப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள், அலுவலகப் பணியாளர்கள் போன்றோர் இவ்விடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. செப்டெம்பர் 15ம் திகதி இடமாற்றத்திற்கான தீர்மானங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பவுள்ளதுடன் செப்டெம்பர் 30ம் திகதி இடமாற்ற மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. நவம்பர் முதலாம் திகதி இடமாற்றங்களுக்கான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435