தபால் சேவை ஊழியர்கள் இன்று மீண்டும் பணிப்புறக்கணிப்பு

தபால் சேவை ஊழியர்கள் ஒன்றியம் இன்று (26) நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

காலி கோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா முதலான மாவட்டங்களிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் காரியாலயங்களை ஓய்வு விடுதிகளாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை 48 மணித்தியாலங்களுக்கு அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

தபால் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறும், தபால் சேவை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறும் வலியுறுத்தி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்தது.

தமது அடையாள பணிப் புறக்கணிப்பை கருத்திற்கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எக்காவிட்டால், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தமது பிரச்சினைகளுக்கு குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்காததையடுத்து, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435