தபால் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை அங்கீகரித்துக் கொள்ள தபால், தபால் சேவைகள் அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இற்கு அமைய சகல அரசாங்க திணைக்களங்களிலும் ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகளைத் தயாரிக்க வேண்டுமென்பதுடன் அதன்படி தபால் திணைக்களத்தில் பல்வேறு தரத்துக்காக புதிய ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் காலத்துக்கு காலம் திருத்தியமைக்கப்பட்டதுடன், தற்போது அதனை முழுவதுமாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் தபால் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை தயாரிப்பது தொடர்பில் பரிசீலித்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இதற்காக பிரதமரின் செயலாளரினால் பெயரிடப்படுகின்ற சிரேஷ்ட அதிகாரிகளின் தலைமையில் மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவம், நிதி மற்றும் வெகுசன ஊடகம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் மற்றும் தேசிய ஊதியம் மற்றும் சேவையாளர் எண்ணிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.