கிழக்கு மாகாண பட்டதாரிகளை சேவைக்கு உள்ளீர்க்கும் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்த வாரத்துக்குள் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்றைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.
கிழக்கில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 1,700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.