பாதிக்கப்பட்டுள்ள வேவர்லி தோட்டத் தொழிலாளர்

தமக்கான சலுகைகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக நடந்த இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தேயிலை மலைகள் நிர்வாகத்தினால் சரியான முறையில் பராமரிக்கப்படாமையினால் தொழில்ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கொழுந்து பறிக்குமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்டப்படி 18 கிலோ கொழுந்து பறிக்க முடிவதில்லை. தோட்டங்களில் தேயிலை குறைவாகவே காணப்படுகிறது. இதனை கவனத்தில் கொள்ளாது குறைந்த நிறையுடைய கொழுந்துக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. இது தொடர்பில் தொழிற்சங்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435